முகப்பு
இந்தியா

நாளை இஸ்ரோ செல்கிறார் பிரதமர் மோடி

கிரீஸில் இருந்து திரும்பியவுடனேயே பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இஸ்ரோ செல்கிறார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
பகிர்:

கிரீஸில் இருந்து திரும்பியவுடனேயே பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இஸ்ரோ செல்கிறார்.

நிலவில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடா்ந்து, தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே காணொலி வழியாக பிரதமர் மோடி புதன்கிழமை பேசினாா்.  அப்போது அவா் தெரிவித்ததாவது: நிலவில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

இந்த வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் சொந்தம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸில் இருந்து தாயகம் திரும்பியவுடனேயே பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காலை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு செல்கிறார். தொடர்ந்து, சந்திரயான்-3 திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து மோடி உரையாடுகிறார். 

அப்போது சந்திரயான்-3 திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →