இந்தியா

அசாம்: பாஜக எம்பி வீட்டில் சிறுவன் உடல் கண்டெடுப்பு

DIN

அசாமில் பாஜக எம்.பி. வீட்டில் இருந்து சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தில் பாஜக எம்.பி. ராஜ்தீப் ராயின் வீடு உள்ளது. இங்கிருந்து 10 வயது சிறுவனின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்பு உடற்கூராய்வுக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து கச்சார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்ரதா சென் கூறுகையில், கழுத்தில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் காணப்பட்டது. சிறுவனின் தாயார் தோலாய் பகுதியைச் சேர்ந்தவர். அவர் இரண்டரை ஆண்டுகளாக பாஜக தலைவரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். 

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பாத எம்.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT