கோப்புப் படம் 
இந்தியா

தெலங்கானா: காவல்நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழப்பு

தெலங்கானாவில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

DIN

தெலங்கானாவில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம், பெல்லம்பள்ளில் நகரில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை கிர்த்தி அஞ்சி(25) என்ற இளைஞர், பெண் ஒருவரின் வீடு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவர் காவல்நிலையத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்தார். 

இந்த நிலையில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்படவே அருகில் இருந்த காவலர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கிர்த்தி அஞ்சியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்த நிலையில் அதுதொடர்பான விடியோ திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT