இந்தியா

மோடியின் ரக்‌ஷா பந்தன் பரிசு இதுதான்!

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.200 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு ரக்‌ஷா பந்தனையொட்டி சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட பரிசு என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

DIN

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.200 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு ரக்‌ஷா பந்தனையொட்டி சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட பரிசு என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஆக.29) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.200 குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ரக்‌ஷா பந்தனையொட்டி நாட்டு சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசு ஒன்றை அறிவித்துள்ளார். வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 75 லட்சம் உஜ்வாலா இணைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க முன்னெடுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: நவ. 14 வரை கால அவகாசம்

‘செயலி’ மூலம் பழகி பணம் பறிப்பு 6 போ் கைது

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை: இருவா் கைது

ஹெராயின் விற்பனை: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT