இந்தியா

ஒரே நாளில் 69.9 லட்சம் பேர் பயணித்த தில்லி மெட்ரோ ரயில்

தில்லி மெட்ரோ ரயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 69.9 லட்சம் பேர் பயணித்தது புதிய சாதனையாக அமைந்துள்ளது.

DIN


புது தில்லி: தில்லி மெட்ரோ ரயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 69.9 லட்சம் பேர் பயணித்தது புதிய சாதனையாக அமைந்துள்ளது.

கரோனா காலத்துக்கு முன்பும், பின்பும் இதுவரை ஒரே நாளில் 68.1 லட்சம் பேர் பயணித்ததே அதிகபட்சமாக இருந்தது. அதையும் தாண்டி கடந்த செவ்வாயன்று 69.9 லட்சம் பேர் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளது.

கரோனா பொதுமுடக்கக் காலத்துக்கு முன்பும் கூட, ரக்சா பந்தன் நாள்களில் அதிகமான பயணிகள் தில்லி மெட்ரோவில் பயணிப்பார்கள். அதேப்போன்றுதான், இந்த முறையும் ரக்சா பந்தன் நாளில் அதிகம் பேர் தில்லி மெட்ரோவில் பயணித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து ஜி20 மாநாடு நடைபெறும் நாள்களிலும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் ஏற்படும் என்பதால் அதிகமானோர் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்... அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே!

கோவை, நீலகிரிக்கு 3 நாள்கள் கனமழை எச்சரிக்கை!

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

SCROLL FOR NEXT