ஜி20 மாநாடு: தில்லி விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
ஜி20 மாநாடு நடைபெறும் நாள்களில் தில்லி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள், சற்று முன்னதாக வீட்டிலிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாஜி20 மாநாடு: தில்லி விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
ஜி20 மாநாடு நடைபெறும் நாள்களில் தில்லி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள், சற்று முன்னதாக வீட்டிலிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புது தில்லி: ஜி20 மாநாடு நடைபெறும் நாள்களில் தில்லி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள், சற்று முன்னதாக வீட்டிலிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஜி20 மாநாடு நடைபெறவிருக்கிறது. எனவே, முக்கிய தலைவர்கள் பலரும் செப்டம்பர் 8ஆம் தேதியே தில்லிக்கு வருகை தரத் தொடங்குவார்கள்.
இந்த நிலையில், தில்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தரப்பில் பொதுமக்களுக்கு ஒருஅறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் முக்கியத் தலைவர்களுக்கு வெளியேற விமான நிலையத்தில் தனி வழி அமைக்கப்படும். எனவே, விமான நிலையத்தில் பெரிய அளவில் சிக்கல் ஏதும் நேரிடாது. ஆனால், முக்கியத்தலைவர்களின் வருகை காரணமாக தில்லி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் மற்றும் விமான நிலையத்துக்குள் பலத்த பாதுகாப்பு, சோதனை நடைபெறும் என்பதால் அதற்கேற்ற வகையில் விமான நிலையத்துக்கு வருவதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்: அரசாணை வெளியீடு
தனி விமானங்களில் முக்கிய தலைவர்களின் வருகையின்போது, சில நேரங்களில் விமானம் புறப்படுவது, தரையிறக்கம் தடைபடலாம். எனவே, தில்லி விமான நிலையத்திலிருந்து விமானத்தில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், தங்களது விமானம் புறப்படும் நேரம் குறித்து அவரவர் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.