பாதிக்கப்பட மாணவர்களை மருத்துவமனையில் சந்தித்த கல்வித்துறை அமைச்சர். 
இந்தியா

விடுதி உணவகத்தில் சாப்பிட்ட 18 அரசுப்பள்ளி மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு, பொறுப்பாளர் கைது!

18 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, விடுதி உணவகத்தின் உணவால் வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

DIN

பஞ்சாப் மாநிலம் சங்குரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில், விடுதி உணவகத்தில் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டன .

விடுதி உணவுக்கான பொருப்பாளர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், துணை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விசாரணைக்குழு  அமைக்கப்பட்டிருப்பதாகவும் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ்  தெரிவித்துள்ளார்.    

மருத்துவமனையிலிருந்து 14 மாணவர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் 4 மாணவர்கள் சிகிச்சை பெற்றுவருவதாக மாவட்ட துணை ஆணையர் தெரிவித்துள்ளார். 

விடுதியிலிருந்து உணவுப்பொருள்களின் மாதிரியும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளதாகவும் துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். உணவுத் தரம் குறித்து ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்ததாக மாணவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT