முகப்பு
இந்தியா

மோசமான வானிலை: விமான சேவை பாதிப்பு

தில்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் திசை திருப்பப்பட்டுள்ளன.

Updated On : 2 டிசம்பர், 2023 at 11:40 AM
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: தில்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தை சென்றடைய வேண்டிய 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ப்பூர், லக்னோ, அஹமதாபாத் மற்றும் அம்ரித்சர் ஆகிய விமான நிலையங்களுக்கு இந்த விமானங்கள் திசை திருப்பப்பட்டுள்ளன.

தில்லியில் கடும்பனியால் விமானத்தைத் தரையிறக்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக விமான நிலைய அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.