கோப்புப்படம் 
இந்தியா

பெண் மீது பலாத்கார வழக்குப் பதிய முடியுமா? விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

ஒரு பெண் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்ய முடியுமா? என்று பஞ்சாப் காவல்துறை பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

புது தில்லி: ஒரு பெண் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்ய முடியுமா? என்று பஞ்சாப் காவல்துறை பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

62 வயதுடைய ஒரு பெண் மீது, அவரது மருமகள் அளித்த பாலியல் பலாத்கார வழக்குக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று 62 வயது மனுதாரர் மற்றும் அவரது தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தனர்.

மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஒரு பெண் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று குறிப்பிட்டனர். மேலும், ஒரு பெண்ணால் அவ்வாறு செய்ய முடியாது என்பதே இதன் அடிப்படை என்றும் கூறியுள்ளனர்.

மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தனது மூத்த மகன் அமெரிக்காவில் பணியாற்றி வருவதாகவும், முகநூல் வாயிலாக ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு விடியோ காலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுளள்து. பிறகு, அப்பெண் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், அவரது இளைய மகன் போர்த்துக்கலிலிருந்து வந்து தனது தாயுடன் இருந்துள்ளார். அவர் மீண்டும் திரும்பும்போது, மருமகள் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தியும், இளைய மகன் இங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், மருமகளும், அவரது குடும்பத்தினரும் தனது முதல் மகனுடனான திருமணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி என்னை துன்புறுத்தினர். இதையடுத்து இரு குடும்பமும் ஒப்புக் கொண்டு அப்பெண்ணுக்கு பிப்ரவரி மாதம் திருமணத்தை ரத்து செய்து ரூ.11 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும் பணம் கேட்டு தங்களை மருமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டியதாகவும், கொடுக்கவில்லை என்றால், தன் மீதும் இளைய மகன் மீதும் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணம் கொடுக்க மனுதாரர் மறுத்ததைத் தொடர்ந்து மருமகள் காவல்நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். இதனை எதிர்த்து மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, பஞ்சாப் காவல்துறையினர் பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கயல் தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்! இனி பிரபல பாடகர் நடிப்பார்!

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

அபூர்வ ராகங்கள் முதல் Coolie வரை! Superstar Rajinikanth-ன் 50 ஆண்டு திரைப்பயணம்

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

கார் கூந்தல்... ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT