திகார் சிறை | EPS 
இந்தியா

50 திகார் சிறை ஊழியர்கள் பணி நீக்கம் - ஆள் மாறாட்டம் காரணம்?

திகார் சிறையின் 50 ஊழியர்களின் பயோ மெட்ரிக் விபரங்கள், சிறை நிர்வாகத்தின் தரவுகளோடு பொருந்தாததால் அவர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN


தில்லியில் உள்ள திகார் சிறையில் பணியாற்றும் 50 பணியாளர்களுக்கு  சிறை நிர்வாகம் பணி நீக்கத்திற்கான நோட்டீஸை அனுப்பியுள்ளது. பயோ மெட்ரிக் தரவுகள் பணியாளர்களுடன் பொருந்தாததே இந்த பணநீக்க அறிவிப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 காவலர்கள், 9 உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு மேட்ரான்களின் பயோ மெட்ரிக் விபரங்கள், நிர்வாகத் தரவுகளோடு பொருந்தவில்லை என திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நோட்டீஸ் தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த வாரியம் தேர்ந்தெடுத்த 450 பணியாளர்களில் 50 பேருக்கு இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த பணியாளர்கள் அனைவரும் வேலை கற்றுக்கொள்ளும் பிரிவில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளனர். அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு பணியாளர்கள் ஒரு மாதத்தில் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT