வெற்றிக் களிப்பில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் | PTI 
இந்தியா

மோடியின் பிரசாரத்தால்தான் இந்த வெற்றி சாத்தியமானது: சிவராஜ் செளகான்

மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்று வருவதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசியுள்ளார்.

DIN

மத்திய பிரதேச மாநிலத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 155 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 68 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் பாஜக தலைவர் சிவராஜ் சிங் செளகான், "நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் உள்ளார். இந்த மாநிலம் அவருக்கு இதயம் போன்றது. அவர் மீது அளவிட இயலாதளவுக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மோடி பேசியது மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அதுதான் தேர்தல் முடிவாக மாறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சி ஒரே அமைந்தால் இரட்டை ஆற்றலுடன் (டபுள்  இன்ஜின்) பாஜக ஆட்சி நடக்கும் என மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டது பலனளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு

கொலை வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

திருமருகல் அருகே விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT