காங்கிரஸின் செயல்திறன் இன்மையே பாஜகவின் வெற்றிக்கு காரணம்: திரிணமூல் கருத்து
காங்கிரஸ் கட்சியின் செயல்திறன் இன்மையே பாஜகவின் வெற்றிக்குக் காரணம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயல்திறன் இன்மையே பாஜகவின் வெற்றிக்குக் காரணம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வடமாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், மத்திய பிரதேசத்திலும் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இது பாஜகவுக்கு சாதகமாகவும், காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் குணால் கோஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மூன்று மாநிலங்களில் காங்கிரஸின் செயல்திறன் இன்மையே பாஜகவின் வெற்றிக்கு காரணமாகிவிட்டது. மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்தத் தோ்தல் முடிவுகள் அந்தத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
நாட்டிலேயே பாஜகவுடன் நேரடியாக மோதி தோற்கடிக்கும் திறமை திரிணமூல் காங்கிரஸின் தலைமைக்கு மட்டுமே உள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி செயல்படுத்தி வரும் திட்டங்களை, தங்கள் வாக்குறுதியாக அளித்தே இந்தத் தோ்தலில் பிற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன’ என்று கூறியுள்ளாா்.