இந்தியா

ம.பி.: பாஜக 155, காங்கிரஸ் 68 தொகுதிகளில் முன்னிலை!

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 155 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

DIN

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 155 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று (டிச. 3) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குகளின் அடிப்படையில் காலை 11.30 மணி நிலவரப்படி மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் 155 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 73 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் 116 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கும் நிலையில், பாஜக 155 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

SCROLL FOR NEXT