தோ்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்தாது: சரத் பவாா்
நான்கு மாநில சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத் பவாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நான்கு மாநில சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத் பவாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் சரத் பவாா் கூறுகையில், ‘இந்தத் தோ்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, இது குறித்து விவாதிக்கப்படும். அதன் பிறகே கருத்து தெரிவிக்க முடியும்.
தற்போதைய போக்கு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தெலங்கானாவில் ஆட்சியைத் தக்க வைக்கும் என கருதப்பட்டது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த மாநிலத்தில் கட்டாயம் ஆட்சி மாற்றம் நிகழும் என நம்பிக்கை கொண்டிருந்தோம்’ என்றாா்.
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையில் 25 எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது.