இந்தியா

அடுத்த 3 மணி நேரத்தில் மிக்ஜம் புயல் பாபட்லாவில் கரையைக் கடக்கும்!

ஆந்திர மாநிலம் பாபட்லாவில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

ஆந்திர மாநிலம் பாபட்லாவில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலான மிக்ஜம், இன்று ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே, பாபட்லாவுக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும். இதனால் பாபட்லாவில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிப்பட்டினத்தின் பல பகுதிகளில் பலத்த மழையால் வயல்வெளிகளில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் திங்கள்கிழமை முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது.

மிக்ஜம் புயல் முழுமையாக கரையை கடக்க இன்று முற்பகல் ஆகிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT