கோப்புப்படம் 
இந்தியா

தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை!

தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பங்குபெறும் சந்திப்பு நடைபெற்றது.

DIN

தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானாவில் ஆளும் பாரதீய ராஷ்டிரிய சமிதியை வீழ்த்தி காங்கிரஸ் முதல் முறையாக தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. தெலங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ்  சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: காங்கிரஸின் இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் பதவி கிடைக்குமா என்பது தெரிந்துவிடும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ராகுல் காந்தி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, கர்நாடக மாநில துணை முதல்வர்  டி.கே.சிவகுமார் மற்றும் தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்கரே உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

அக்.5-இல் ராணிப்பேட்டை புத்தகத் திருவிழா தொடக்கம்: ஆட்சியா் அறிவிப்பு

SCROLL FOR NEXT