மம்தா பானர்ஜி | AP 
இந்தியா

பாஜக, நாட்டிலேயே மிகப்பெரும் திருடர்கள் : மம்தா பானர்ஜி

தேர்தலுக்கு முன்பு பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் மம்தா பானர்ஜி.

DIN

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை, பாஜக மாபெரும் திருடர்களின் கட்சி, தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய புலனாய்வு முகமைகள் மாநிலத்துக்கு அடிக்கடி வருவது பாஜக கட்சிக்கு அரசியல் தீனி தருவதற்காக எனப் பேசியுள்ளார்.

“பாஜக, நாட்டிலேயே மிகப்பெரும் திருடர்கள் (பிக்பாக்கெட்) அவர்கள்தான். அதனால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 15 லட்சம் ஒவ்வொருவரின் கணக்கிலும் வரவு வைப்பதாகச் சொன்னது, பண மதிப்பிழப்பு, கொரானா காலத்தில் இலவச ரேசன் பொருள்களை நிறுத்தியது. மக்களை பொய்யான வாக்குறுதிகள் அளித்து அதை நிறைவேற்றுவதாக நம்பச் செய்கிறார்கள். நாங்கள் அவர்களைப் போல இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

பெரியளவிலான வேலை அட்டை மோசடியில் ஈடுபட்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு பணம் வழங்கப்படுகிறது, மேற்கு வங்கத்தில் 100 நாள் வேலைக்கான தொகை நிலுவையில் உள்ளது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவுரையின் பேரில் தங்கள் மாநிலத்துக்குச் சேர வேண்டிய நிலுவை தொகை குறித்து பேச பிரதமரை மீண்டும் ஒருமுறை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT