இந்தியா

அம்பேத்கர் நினைவு தினம்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

DIN


மும்பை: மாகராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பயாஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துனை முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் மறைந்த சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 67-வது நினைவு நாளன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அம்பேத்கர் மறைந்த நாள், மகாபரிநிர்வாண் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மும்பை சிவாஜி நகரில் உள்ள அம்பேத்கரின் நினைவிடம் சைத்யபூமியில் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் அம்பேத்கரின் நினைவிடத்திற்கு வந்து மலரஞ்சலி செலுத்தினர்.

சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர் அம்பேதக்ர் என சரத் பவார் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தாக்கரே கட்சி, அம்பேத்கர் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் குவிந்திருக்கும் மக்களின் எண்ணிக்கையே அவரது பணி மற்றும் கருத்தியலுக்கான சாட்சி எனத் தெரிவித்துள்ளது.

டிச. 6 - பொது விடுமுறையாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் நினைவு தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் மும்பையில் உள்ள அவரது நினைவிடத்தில் குவிந்து வருவதால் மக்களுக்குத் தேவையான தற்காலிக கூடாரங்கள், குடிநீர் மற்றும் கழிவறை வசிதிகளைச் செய்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

SCROLL FOR NEXT