இந்தியா

ரத்தன் டாடாவையும் விட்டு வைக்காத டீப்ஃபேக் தொல்லை..!

முதலீடு குறித்து தான் பேசியதுபோல் உருவாக்கப்பட்ட விடியோ பொய்யானது என ரத்தன் டாடா கூறியுள்ளார்.

DIN

செயற்கை நுண்ணறிவு வளா்ச்சியின் ஒரு பகுதியாக ‘டீப்ஃபேக்’ (Deep Fake) தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒருவா் பேசும் உண்மையான ஆடியோ, விடியோ, புகைப்படங்கள் போன்று மற்றொரு நபா் மூலம் போலியான ஆடியோ, விடியோ, புகைப்படங்களை உருவாக்க முடியும். 

அதாவது ஒருவரது உருவத்தையும், குரலையும் பயன்படுத்தி மற்றொருவா் நடித்து அவரை போன்ற விடியோவையோ, ஆடியோவையோ உருவாக்க முடியும்.

டீப்ஃபேக்கில்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, கஜோல், பிரியங்கா சோப்ரா ஆகியோரின் போலி காணொளிகள் இணையத்தில் வைரலானது.  

இந்த நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு பேசிய விடியோவைப் பலர் பகிர்ந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த விடியோ போலியானது என ரத்தன் டாடா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகைகளின் டீப்ஃபேக் விடியோக்களின் சர்ச்சைகளே முடியாத நிலையில், ரத்தன் டாடா போன்ற மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கும் தொல்லை கொடுக்க துவங்கியுள்ளனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்பார் சுவாமி கோயிலில் திருத்தேர் உற்சவம்!

உங்கள் உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா? எலான் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ் ஆப் மறுப்பு!

தில்லி யமுனை ஆற்றில் சொகுசுப் படகுப் பயணம்! சுற்றுலாத் துறை அமைச்சர்

பாஜகவுடன் இருப்பவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள்; என்டிஏ ஒரு துரோகக் கூட்டணி! - முதல்வர் பேச்சு

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: நடிகர் ஜெயராம் வாக்குமூலம்!

SCROLL FOR NEXT