இந்தியா

ஹைதராபாத் வந்தடைந்த சோனியா, ராகுல், பிரியங்கா!

தெலங்கானா முதல்வராக ஏ.ரேவந்த் ரெட்டி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் ஹைதராபாத் வந்தடைந்தனர். 

DIN


தெலங்கானா முதல்வராக ஏ.ரேவந்த் ரெட்டி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் ஹைதராபாத் வந்தடைந்தனர். 

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காந்தி குடும்பத்தினரை ரேவந்த் ரெட்டி சிறப்பான வரவேற்பு அளித்தார். இன்று பிற்பகல் எல்.பி.மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவர்கள் கலந்துகொள்கின்றனர். 

காந்தி குடும்பத்தினர், அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர்களை நேற்று தில்லியில் சந்தித்தபோது ரெட்டி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார். 

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், அண்டை மாநில அமைச்சர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 119 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 64 இடங்களைக் கைப்பற்றி பாரத ராஷ்டிர சமிதியிடம் (பிஆர்எஸ்) காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

கட்சிக்காக ராகுல், பிரியங்கா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த செப். 17 அன்று ஹைதராபாத்தில் நடந்த மாபெரும் பேரணியில் சோனியா காந்தி கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT