கோப்புப் படம். 
இந்தியா

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

DIN

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம்  யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இத்தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. 

இதனிடையே 1,105 காலி பணியிடங்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ஜூன் 12 ஆம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின. 

இதைத்தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு கடந்த செப். 15, 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இது 9 எழுத்துத் தேர்வுகளை உள்ளடக்கியது.

இந்த நிலையில் செப்டம்பர் 15 முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடுமையான மாசு: போக்குவரத்து போலீஸாருக்கு குளிா்கால பாதுகாப்பு திட்டம் தயாரிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள்: உச்சநீதிமன்றம் திட்டம்

முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகிறது தமிழகம்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

இறுதிக்கட்டத்தில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடுபோன ரூ. 58 லட்சம் கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT