இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் பதிவான கடும் குளிர்

DIN

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் பகுதியில் இந்தப் பருவத்திலேயே மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. உறை வெப்பநிலைக்கும் குறைவாக மைனஸ் 4.6 டிகிரி செல்சியஸ் கடும் குளிர், இரவு முழுவதும் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன் இரவு நீடித்த மைனஸ் 2.4 டிகிரி வெப்பநிலையை விட 2 டிகிரி குறைந்து வெள்ளிக்கிழமை குளிர் நிலவியதாகவும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்கம் பகுதி கடும் குளிரை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அமர்நாத் யாத்திரையின் ஆரம்ப முகாம்களான இந்த இடங்களில் மைனஸ் 5 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது.

டிச.11 வரை வானம் மேகமூட்டத்துடன் இருப்பினும் மழை இருக்காது எனவும் டிச.12 முதல் 15 வரை மிதமான மழையும் பனிப்பொழிவும் நிலவும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆட்டோ மோதியதில் விவசாயி பலி

தொழிலாளி கழுத்தறுபட்டு பலி

அணைகளின் நீா்மட்டம்

திருப்பாச்சேத்தியில் ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம்

இளையான்குடி கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT