கோப்புப்படம் 
இந்தியா

பாஜகவில் ஒழுங்கு இல்லை: அசோக் கெலாட்

ராஜஸ்தான் தேர்தலில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் இன்று தில்லி சென்றுள்ளார். 

DIN

ராஜஸ்தான் தேர்தலில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் இன்று தில்லி சென்றுள்ளார். 

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் பறிகொடுத்தது. மத்திய பிரதேசத்திலும் தோல்வியைத் தழுவிய நிலையில் ஆறுதலாக தெலங்கானாவில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. 

ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக பேரவைத் தோ்தல்களின்போது ஆட்சி மாற்றம் நீடித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில், 115 இடங்களில் வென்று பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. காங்கிரஸ் 69 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து அதுகுறித்து ஆய்வு செய்ய, அக்கட்சியின் மூத்த தலைவரும் தற்காலிக முதல்வருமான அசோக் கெலாட் இன்று தில்லி சென்றுள்ளார்.

ராஜஸ்தான் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் தில்லி கூட்டத்தில் பங்கேற்கிறார். 

முன்னதக செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், 'தேர்தல் முடிவுகள் வந்து 7 நாள்களாகியும் பாஜக, மூன்று மாநிலங்களிலும் முதல்வர் யார் என்பதை அறிவிக்க முடியவில்லை. அந்த கட்சியில் ஒழுங்கு இல்லை. இதையே நாங்கள் செய்திருந்தால், அவர்கள் எங்களுக்கு எதிராகவும் மக்களை தவறாக வழிநடத்தியும் என்ன மாதிரியான குற்றச்சாட்டுகளை வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வாக்குகளை பிளவுபடுத்தியுள்ளனர். எனினும் புதிய அரசுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT