13 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிம் வந்த தலாய் லாமா!
திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு வந்துள்ளார்.
திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு வந்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்திற்கு திங்கள்கிழமை காலை வருகை தந்த திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவை சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமங் வரவேற்றார்.
மேலும் பல்வேறு பௌத்த மடாலயங்களைச் சேர்ந்த துறவிகளும் அவருக்கு பௌத்த மத வழக்கப்படி ஷெர்பாங் பாடலைப் பாடி, நடனமாடி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
Advertisement
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: தலைமை நீதிபதி
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் பதிவிட்டுள்ளதாவது, “சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் உள்ள லிபிங் ஹெலிபேடில் 14வது தலாய் லாமாவுக்கு எனது அன்பான வரவேற்பு வழங்கி, மரியாதை செலுத்தியது எனது பாக்கியம்.
அவரது புனிதத்தன்மை நமது மாநிலத்திற்கு அமைதியைக் கொண்டுவருகிறது. அவருடைய ஆழ்ந்த போதனைகள் மற்றும் முன்மாதிரியான வழிகாட்டுதல்கள் நம் இதயத்தையும், மனதையும் வளப்படுத்துகிறது. ஆசீர்வதிக்கப்பட்ட சிக்கிம் பூமிக்கு, அவரை வரவேற்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
87 வயதான தலாய் லாமா இந்தியா மற்றும் சீன எல்லையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பால்ஜோர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை போதனை செய்ய உள்ளார்.