முகப்பு
இந்தியா

பிரதமரை சந்திக்கவுள்ள மம்தா பானர்ஜி; காரணம் என்ன?

மேற்கு வங்கத்துக்கான நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
பகிர்:

மேற்கு வங்கத்துக்கான நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியளிப்பதை நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் நிதியளிக்க வேண்டியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

இந்த நிலையில், மேற்கு வங்கத்துக்கான நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மற்றும் மம்தா பானர்ஜியின் சந்திப்பு வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி முற்பகலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →