இந்தியா

நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்குத் தடை!

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவத்தையடுத்து பார்வையாளர் அனுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவத்தையடுத்து பார்வையாளர் அனுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பை மீறி நாடாளுமன்ற மக்களவைக்குள் இன்று பிற்பகல் இருவர்  நுழைந்து புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென்று அவைக்குள் குதித்து ‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அவைக்கு வெளியே கோஷமிட்ட இரு பெண்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த தாக்குதலால் நாடாளுமன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவத்தையடுத்து, பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

மேலும், இன்றைய சம்பவம் குறித்து பேச, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT