ஹைதராபாத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 15 பேர் காயம்!
ஹைதராபாத்தில் உள்ள பேக்கரி சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 15 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள பேக்கரி சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 15 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேரிய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார்.