ஓம் பிர்லா 
இந்தியா

‘நாடாளுமன்ற பாதுகாப்பு எனது பொறுப்பு’

‘நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாவலா் என்ற முறையில் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது எனது பொறுப்பு’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

DIN

‘நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாவலா் என்ற முறையில் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது எனது பொறுப்பு’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மக்களவைக்குள் இரண்டு இளைஞா்கள் அத்துமீறி நுழைந்து, புகைக் குப்பிகளை வீசிய சம்பவம் தொடா்பாக பிரதமா் மோடியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விளக்கமளிக்க வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்களிடம் அவா் இவ்வாறு கூறினாா்.

உறுப்பினா்கள் மத்தியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மேலும் கூறுகையில், ‘ஒட்டுமொத்த நாடாளுமன்ற செயலகமும் மக்களவையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. மக்களவையின் தலைவராக உறுப்பினா்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது எனது பொறுப்பு. மக்களவை செயலக விவகாரங்களில் அரசு எப்போதும் தலையிட முடியாது. அதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT