இந்தியா

ஏ350, ஏ320 விமானங்களை பராமரிக்க ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அனுமதி!

DIN

மும்பை: ஏ350 மற்றும் ஏ320 விமானங்களைப் பராமரிப்புக்கு டி.ஜி.சி.ஏ ஒப்புதலைப் பெற்றுள்ளதாக தனியார் விமான நிறுவனமான ஏர் இந்தியா இன்று தெரிவித்தது.

குருகிராமை தளமாகக் கொண்ட விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர்பஸ் 350-900 விமானத்தை தனது சேவையில் இணைக்கும், என்று எதிர்பார்க்ப்படுகிறது. அதன் முதல் கட்டமாக மொத்தம் 6 விமானங்களை இணைக்க விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதலில் இணையவிருக்கும் ஆறு ஏ350 விமானங்களின் சீரான இயக்கம் மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதிலும், ஏ350-வின் பராமரிப்புக்கான ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்குவது அதன் முக்கிய அம்சமாகும் என்று ஏர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் ஆறு விமானங்களில் முதல் விமானம் இம்மாத இறுதிக்குள் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கிய ஒப்புதலுடன், ஏர் இந்தியா பொறியாளர்கள் ஏ350 விமானங்களைப் பராமரிப்பது தொடர்பான எந்தவொரு பணியிலும் ஈடுபடுவதற்காக டிஜிசிஏ குழுமத்தின் சான்றிதழ் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

சிகாகோவில் பயின்றுவந்த தெலங்கானா மாணவர் மாயம்

SCROLL FOR NEXT