ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் பஜன்லால் சா்மா 
இந்தியா

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சா்மா பதவியேற்பு!

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக பஜன்லால் சா்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். 

DIN

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக பஜன்லால் சா்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். 

ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பா்ட் அரங்கில், புதிய முதல்வராக பஜன்லால் சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். 

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

பிரேம்சந்த் பைரவா

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில், 115 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.

தியாகுமாரி

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சா்மா சில தினங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டார். மாநிலத்தின் துணை முதல்வா்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT