இந்தியா

இரண்டாவது காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வை, வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

DIN

வாரணாசி: காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வை, வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

வாரணாசி-கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டிசம்பர் 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 1,400 பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு செல்ல உள்ளனர்.

'கங்கா' என்ற பெயரில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடங்கிய தமிழ் குழுவின் முதல் குழு இன்று வாரணாசியை அடைந்தது. இதில் ஆசிரியர்கள் (யமுனா) எனவும், தொழில் வல்லுநர்கள் (கோதாவரி) எனவும், ஆன்மீகத் தலைவர்கள் (சரஸ்வதி) எனவும், விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் (நர்மதா) எனவும், எழுத்தாளர்கள் (சிந்து) மற்றும் வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் (காவேரி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

கலாச்சார பரிமாற்றம் தவிர, தமிழ்நாடு மற்றும் காசி ஆகிய இரு மாநிலங்களின் கலை, இசை, கைத்தறி, கைவினைப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பிற தனித்துவமான தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியும் உள்ளது. இந்த நிகழ்வில் காசி மற்றும் தமிழகத்தின் தனித்துவமான பாரம்பரியங்களை எடுத்துக்காட்டும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறும். 

இதில் கலாச்சாரம், சுற்றுலா, ரயில்வே, ஜவுளி, உணவு பதப்படுத்துதல், எம்.எஸ்.எம்.இ, தகவல் மற்றும் ஒளிபரப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் உத்தரபிரதேச அரசு தொடர்புடைய துறைகளின் பங்கேற்புடன் மத்திய கல்வி அமைச்சகம் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது.

காசித் தமிழ் சங்கமத்தில் இலக்கியம், தொன்மையான நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட சொற்பொழிவுகள் இடம்பெறும். மேலும் வர்த்தகம், அறிவு பரிமாற்றம், கல்வி மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT