இந்தியா

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட பிரதமர் மோடி

DIN

பிரதமர் மோடி வாராணசியில் சாலை மார்க்கமாக பயணித்தபோது அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸுக்கு அவரது கார் வழிவிட்ட விடியோ வைரலாகி வருகிறது. 

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அவரது தொகுதியான வாராணசிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தார். விமான நிலையத்திலிருந்து காரில் பயணித்த அவரை மலர் தூவி மக்கள் வரவேற்றனர்.  இந்த பயணத்தின் போது ரூ.19,000 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளில், 2 -ஆம் கட்ட காசி-தமிழ்ச் சங்கமம் 2023 நிகழ்ச்சியை வாராணசி (காசி) யின் ’நமோ’ படித்துறையில் (ஆற்றங்கரை) தொடங்கி வைக்கிறாா். தொடர்ந்து, கன்னியாகுமரி - வாராணசி தமிழ்ச் சங்கமம் விரைவு ரயிலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா். 

முன்னதாக இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பரில் குஜராத்திலும் பிரதமர் மோடி சென்ற வாகனம் ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு வழிவிடுவதற்காக நிறுத்தப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் தீர்ப்பை மாற்ற முடியாது: பிரதமர் மோடி

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

ஆஹா... ஞாயிறு!

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT