காவல்துறையினரிடம் புகார் அளித்த தலித் மக்கள் | Express 
இந்தியா

திருப்பூரில் தீண்டாமை! தலித் மக்கள் காலணி அணியத் தடை!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கிராமங்களில் தலித் மக்கள், காலணிகள் அணியக்கூடாது என்கிற சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

DIN

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராஜாவூர் மற்றும் மைவாடி கிராமங்களில் தலித் மக்கள், காலணிகள் அணியக்கூடாது என்ற சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் காவல்துறையினர் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்திவருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் மடத்துவாக்கத்தில் உள்ள இந்த இரண்டு கிராமங்களில் தலித் மக்களை தாழ்வாக நடத்தும் குற்றம் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. டீ கடைகளில் தலித் மக்களுக்கு மட்டும் பேப்பர் கப்புகளைப் பயன்படுத்துவது, ராஜாவூர் மற்றும் மைவாடி கிராமங்களுக்கு காலணிகள் அணிய தலித் மக்களுக்கு தடை விதிப்பது போன்ற தீண்டாமைக் குற்றங்கள் தொடர்ந்து நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. 

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

இந்த ஒடுக்குமுறைகள் பல ஆண்டுகளாக இங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் மீறுபவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறும் எனவும் மக்கள் தெரிவிப்பதாக சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய உடுமலைப்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜே சுகுமாரன், இந்தக் குற்றச்சாட்டினை உறுதி செய்ய காவலாளர்கள் சாதாரண உடைகளில் ஊருக்குள் அனுப்பப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வருவாய் பிரிவு அலுவலர் தலைமையிலான அமைதி பேச்சு வார்த்தைக்கு, இரண்டு சாதியினருக்கு கடிதம் மூலம் அழைப்பு விட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT