மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம்!
மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி அவர்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், சுப்ரியா சுலே, சசி தரூர் உள்ளிட்ட 49 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை உறுப்பினா்கள் 33 போ், மாநிலங்களவை உறுப்பினா்கள் 45 போ் என 78 எம்.பி.க்கள் திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதுவரை இக்கூட்டத்தொடரில் மக்களவையில் 95 பேர், மாநிலங்களவையில் 46 பேர் என 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை தற்போது 141-ஆக அதிகரித்துள்ளது.
குளிா்கால கூட்டத்தொடா் வரும் 22-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.