நாடாளுமன்றம் | PTI 
இந்தியா

‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் இடைநீக்கம்... இத்தனை பேரா?

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பிய எம்.பிக்கள் கணிசமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

DIN

மக்களவையில் தொடர்ச்சியாக எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்தியா கூட்டணியில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்கள் அவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

குளிர் கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான காங்கிரஸின் உறுப்பினர்களில் சோனியா காந்தி, ராகுல் உள்பட 9 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை 49 எம்.பிக்கள் மக்களவையின் நெறிகளை மீறியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதோடு ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 138. இவர்களில் 43 பேர் மட்டுமே அவையில் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ராஜன் செளத்ரி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

திரிணமூல் எம்பிக்கள் 22 பேரில் 13 பேரும் திமுகவின் எம்.பிக்கள் 24 பேரில் 16 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மியின் ஒரேயொரு உறுப்பினர் சுஷில் குமார் ரின்கு மற்றும் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர். சிவ சேனை உறுப்பினர்கள், முஸ்லீம் லீக், விசிக, ஆர்எஸ்பி உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இல்லாத போதும் அந்தக் கட்சியின் உறுப்பினர் தனீஷ் அலி நீக்கப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

SCROLL FOR NEXT