கோப்பு 
இந்தியா

காங்கிரஸ், சிபிஎம் மோதல்: தெருச்சண்டையான சச்சரவு!

காங்கிரஸ் கட்சியின் மாணவ அமைப்புக்கும் சிபிஎம் அமைப்பு இளைஞர் அமைப்புக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் வெடித்து வருகிறது.

DIN

கேரள முதல்வரின் வாகனத்துக்கு முன்பு கருப்பு கொடி காட்ட முயன்ற கேரள மாணவ இயக்கத்தினருக்கும் ஜனநாயக வாலிப சங்கத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

நவ கேரள சதா பயணத்தில் இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாநில அமைச்சர்கள் செல்லும் வாகனங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாணவ இயக்கத்தினர் கருப்பு கொடி காட்ட முயற்சி செய்தனர்.

இதனை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிப சங்கத்தினர் தடுக்க முயன்றனர்.

இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்பு, சண்டையாக மாறியது. குச்சிகளைக் கொண்டு ஒருவரை ஒருவரைத் தாக்கியுள்ளனர். காவலர்கள் அவர்களைத் தடுத்து ஆர்ப்பாட்டத்துக்கு முடிவுகட்டினர்.

கேரள மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் முதல்வர் பினராயி விஜயன் பயணம் மேற்கொண்டு வருகிறார். கேரள மாணவ இயக்கத்துக்கும் ஜனநாயக வாலிப சங்கத்துக்கும் இடையே பல்வேறு இடங்களில் சண்டை நடந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT