முகப்பு
இந்தியா

காவல் நிலைய வளாகத்தில் குண்டு வெடிப்பு!

மர்மமான இந்தக் குண்டுவெடிப்பு குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 20 டிசம்பர், 2023 at 1:29 PM
மாதிரி படம்
பகிர்:

பூஞ்ச்: ஜம்மு- காஷ்மீர், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆயுதப் படைப் பிரிவின் முகாமில் மர்மமான குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திடீர் வெடிப்பினால், ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வளாகத்தின் உள்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் முகப்பு கண்ணாடிகள் ஆகியவை சேதமடைந்துள்ளன. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

டிச.19 இரவின் பிற்பகுதியில் நடைபெற்ற இந்த மர்மமான வெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.