முகப்பு
இந்தியா

காஸாவின் நிகழ்வுகளே கரு: வரவேற்பைப் பெறும் நாடகம்!

இந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அர்ப்பணிப்பு மிக்க பயிற்சியைக் கோருவதாக இருந்தது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:29 PM
அஞ்சலி ஷர்மா | Instagram
பகிர்:

நடிகை அஞ்சலி ஷர்மா,  ‘ஆப்ரேஷன் மேபேர்’ படத்தின் மூலமாக அறியப்பட்டவர். காஸாவின் போர் நிகழ்வுகளை மையமாக வைத்து இயற்றப்பட்டுள்ள அவரது ஒருநபர் நாடகம் பலரையும் ஈர்த்துள்ளது. 

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த முன்னெடுப்பு, அம்மக்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்குத் தீர்வாக நீதி, சமத்துவம் மற்றும் விடுதலை ஆகியவற்றைப் பேசுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நாடகத்தின் இயக்குநர் மற்றும் பயிற்சியாளர் அதுல் குமார் வழிநடத்தலில் அஞ்சலி ஷர்மா இதில் நடித்துள்ளார்.

இது குறித்து அஞ்சலி, “இந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அர்ப்பணிப்பு மிக்க பயிற்சியைக் கோருவதாக இருந்தது. கனமான வசனங்களும், உணர்ச்சிகளும் சவால் மிகுந்ததாக இருந்தன. இது நல்லதொரு கற்றல் சார்ந்த அனுபவம்” எனத் தெரிவித்துள்ளார்.

2010-ல் அஸ்தர் தியேட்டர் சார்பில் எழுதப்பட்ட நாடகமான இது, கலை ரீதியான துல்லியமான காட்சிப்படுத்தல் மற்றும் உண்மைத்தன்மையால் பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →