முகப்பு
இந்தியா

அரபிக் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது டிரோன் தாக்குதல்

அரபிக் கடல் பகுதியில், வணிகக் கப்பல் ஒன்றின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 23 டிசம்பர், 2023 at 6:18 PM
பகிர்:


துபை: அரபிக் கடல் பகுதியில், வணிகக் கப்பல் ஒன்றின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்வி செம் ப்ளூட்டோ எனப்படும் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் கப்பலில் தீப்பிடித்ததாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

லைபீரிய நாட்டுக் கொடியுடன், கச்சா எண்ணெய் அல்லது ரசாயன டேங்கர் ஏற்றப்பட்ட, இஸ்ரேலுக்குச் சொந்தமான வணிகக் கப்பல் ஒன்று சௌதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் வழியில், அரபிக் கடல் பகுதியில் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த வணிகக் கப்பலானது மங்களூருக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.