கோப்புப்படம். 
இந்தியா

கடும் மூடுபனியால் 11 சர்வதேச மற்றும் 5 உள்நாட்டு விமானங்கள் தாமதம்!

தில்லியில் நிலவிவரும் கடுமையான மூடுபனியால் 11 சர்வதேச மற்றும் 5 உள்நாட்டு விமானங்களின் இயக்கம் தாமதமாக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் இயல்பான இயக்கம் கடும் மூடுபனியால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியைச் சூழ்ந்திருக்கும் இந்த மூடுபனியால் 11 சர்வதேச விமானங்களும், 5 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக்கப்பட்டுள்ளன. 

கடும் மூடுபனியால் இயல்பான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் ரயில்கள் எதுவும் தாமதமானதாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டதாகவோ ரயில்வே அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

தலைநகரில் குளிர் அதிகமானதைத் தொடர்ந்து மக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். கடும் குளிர் மற்றும் மாசுபாட்டால் காலையில் நடைபயிற்சி செய்பவர்களிலிருந்து வியாபாரிகள் வரை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தில்லியில் காற்றின் தரம் தற்போது 'மிகவும் மோசமான' நிலையில் உள்ளதாக காற்றின் தரம் குறித்த ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு

ஆம்பூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

92 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT