முகப்பு
இந்தியா

லாலு பிரசாத், நிதீஷ் குமார் இணையவுள்ளனரா? மத்திய அமைச்சர் கிளப்பிய சர்ச்சை

பிகாரின் பிரதான கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் ஒன்றிணையவுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மத்திய அமைச்சர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
கிரிராஜ் சிங் | கோப்பு
பகிர்:

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதன் எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரியா ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகள் ஒன்றிணைய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனவரிக்குள் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்படும் என நிதீஷ் குமார் வலியுறுத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது இவ்வாறு கிரிராஜ் சிங் கூறினார்.

மேலும் அவர், “நான் லாலு உடன் தனிப்பட்ட கணக்கீடுகளைப் பகிர்ந்துக் கொண்டுள்ளேன். எனக்கு நிறைய விஷயங்கள் அவர் சொன்னார், எல்லாவற்றையும் பொதுவில் சொல்ல முடியாது. ஐக்கிய ஜனதா தளம் விரைவில் ராஷ்டிரிய ஜனதா தளத்தோடு இணையவுள்ளது. ஆகவே தொகுதி பகிர்மானம் குறித்து கவலைப்பட தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் மற்றும் கிரிராஜ் சிங் தில்லியில் இருந்து திரும்பி வரும்போது ஒரே விமானத்தில் பயணித்தது குறிப்பிடத்தகக்து.

விமானத்தில் லாலு பிரசாத் தனது மகன் தேஜஸ்வி யாதவை அடுத்த முதல்வராக்க உள்ளதாகக் குறிப்பிட்டதாக கிரிராஜ் சிங் கூறினார்.

இதனை மறுத்துள்ள தேஜஸ்வி யாதவ்,. மத்திய அமைச்சர் பாஜக கட்சிக்குள் அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை எனக் குற்றம்சாட்டியவர் வந்தார். புகழ்வெளிச்சத்தில் இருக்க இதுபோல பேசி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →