இந்தியா

ஜெஎன்.1 வகை கரோனா ஆபத்தானதா? 

ஜெஎன். 1 வகை கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கோவாவில்தான் அதிக எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

PTI

புது தில்லி: நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 63 பேருக்கு கரோனா வைரஸின் புதிய திரிபான ஜெஎன். 1 வகை கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கோவாவில்தான் அதிக எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த ஜெஎன்.1 வைரஸ் பாதிப்பில் கிட்டத்தட்ட 34 பாதிப்புகள் கோவாவில் பதிவாகியிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் 9 பேருக்கும், கர்நாடகத்தில் 8 பேருக்கும், கேரளத்தில் 6 பேருக்கும், தமிழகத்தில் நான்கு பேருக்கும், தெலங்கானாவில் இருவருக்கும் புதிய வகை கரோனா பாதித்துள்ளது.

இதுவரை பதிவான பாதிப்புகளில் ஒரே இடத்தில் அதிக பாதிப்பு போன்ற எதுவும் இல்லை, மேலும் ஜெஎன்.1 வைரஸ் திரிபு மாறுபாட்டின் அனைத்து நோயாளிகளும் லேசான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் கரோனா பாதித்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 4,054 ஆக உள்ளது, அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கேரளத்தில் பதிவாகியிருக்கிறது. இதில் கேரளத்தில் 3128 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் கர்நாடகம் உள்ளது. அங்கு 344 பேர் உள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் மூத்த விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பேசுகையில், ஜெஎன். 1 திரிபு கரோனா மிக அபாயமானது என்றோ, இதனால், பாதிப்புகள் அல்லது பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றோ இதுவரை எந்த தகவலும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

தற்போதைய சான்றுகளின் அடிப்படையில் ஜெஎன்.1ஆல் ஒட்டுமொத்தமாக மக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT