இந்தியா

புதிதாக 628 பேருக்கு கரோனா தொற்று; ஒருவா் உயிரிழப்பு

DIN

புது தில்லி: நாடு முழுவதும் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில்  628 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக் காரணமாக கேரளத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். 

கடந்த வியாழக்கிழமை தேசிய அளவில் 358 பேருக்கும், கேரளத்தில் மட்டும் 300 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மற்றும் கேரளத்தில் 3 போ் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 752 பேருக்கு கரோனா தொற்று  பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில்  628 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக் காரணமாக கேரளத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு 4,054 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. 

நாடு முழுவதும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது 4,50,09,248 (4.50 கோடி) ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,44,71,860 (4.44 கோடி) ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தேசிய மீட்பு விகிதம் 98 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 5,33,334 (5.33 லட்சம்) பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.19 சதவிகிதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை 220.67 கோடி கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சக இணையதள தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

சிகாகோவில் பயின்றுவந்த தெலங்கானா மாணவர் மாயம்

SCROLL FOR NEXT