கோப்புப் படம் 
இந்தியா

பனிமூட்டம்: தில்லி விமான நிலையத்தில் 30 விமானங்கள் தாமதம்

கடுமையான பனிமூட்டம் காரணமாக, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

PTI


புது தில்லி: கடுமையான பனிமூட்டம் காரணமாக, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனிமூட்டம் காரணமாக, புது தில்லி விமான நிலையத்திலிருந்து இன்று காலை முதல் பல்வேறு இடங்களுக்குப் புறப்பட வேண்டிய 30 விமானங்கள் காலதாமதத்துடன் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து, பயணிகள் அந்தந்த விமான சேவை நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு கேட்டறியவும் அறிவுறுத்தப்பட்டுளள்து.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 3 அல்லது 4 நாள்களுக்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT