கோப்பு 
இந்தியா

ரெளடிகளைச் சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்தால்... : காவல்துறை

அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் களத்தில் செயல்படவும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் உள்ளனர்.

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காவல் துறை, குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக மூன்று நாள் சிறப்பு முகாமை புதன்கிழமை தொடங்கியுள்ளது.

இந்த முகாமின்போது காவல்துறை குழுக்கள், அனைத்து மாவட்டங்களிலும் குற்றவாளிகளைச் சோதனையிடும் பணிகளை மேற்கொள்ளும்.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் பேசும்போது, ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஸ்ராவின் வழிகாட்டுதல்படி குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக தீவிரமான முன்னெடுப்பைக் காவல்துறை தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் டிஜிபி எம்.என்.தினேஷ் தலைமையில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் களத்தில் செயல்படவும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் உள்ளனர். 

ஆயுதச் சட்டம், கலால் சட்டம், போதை பொருள்கள் மற்றும் உளநிலை கட்டுப்பாட்டு மருந்துகள் (என்டிபிஎஸ்) சட்டம் ஆகியவற்றின்கீழ் தேடப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக இந்த முகாம் நாள்களில் நடவடிக்கை மேற்கொள்ளவும் இதுகுறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படவும் உள்ளது.

இது தவிர, சமூக வலைதளங்களில் ரெளடிகளைப் பின் தொடர்பவர்கள் மற்றும் கருத்து பின்னூட்டமிடுபவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

SCROLL FOR NEXT