இந்தியா

அயோத்தி ராமர் கோயில் திறப்பு 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: தேவேந்திர ஃபட்னவீஸ்

DIN

அயோத்தி ராமர் கோயில் திறப்பு 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அயோத்தியில் இருந்தவாறு ஆறு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில் ஜல்னா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையும் அடங்கும். அப்போது ஜல்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மராத்வாடாவுக்கு இது ஒரு முக்கியமான நாள். 

பிராந்தியத்தின் பொருளாதாரம் மேம்படும். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதமர் மோடியின் தலைமையில் மராத்வாடா சிறந்த வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அடுத்த மாதம் அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோயில் பற்றி பேசிய அவர், இது ஒரு கோயில் மட்டுமல்ல, இந்தியாவின் பெருமையின் சின்னம். 

ராமர் நம் இதயத்திலும் மனதிலும் இருக்கிறார். கோயில் திறப்பு விழா 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT