அயோத்தியில் வாகன பேரணியில் பிரதமர் மோடி 
இந்தியா

அயோத்தியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் உள்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி அயோத்தி வந்துள்ளார். 

DIN

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அயோத்தி வந்தடைந்தார், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையம், பல்வேறு வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்துக்கு வாகன பேரணியாகச் சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

புதிய விமான நிலையம் அருகே நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். 

அயோத்தியில் ரூ.11,100 கோடிக்கும் அதிக மதிப்பில் பணி நிறைவடைந்த பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு பிரதமா் மோடி இன்று அடிக்கல் நாட்டவிருக்கிறாா். உத்தரப் பிரதேசத்தின் இதர பகுதிகளில் ரூ.4,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார். 

இந்நிகழ்ச்சியில் முதல்வா் யோகி ஆதித்யநாத், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, உள்ளூா் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர். 

 இதையொட்டி, பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

காவல் நிலையத்தில் இன்று குறைகேட்பு முகாம்

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT