மும்பை: சொத்துக்கள் பதிவு 33 சதவிகிதம் அதிகரிப்பு!
மும்பை மாநகராட்சி பகுதியில் சொத்துகளின் பதிவு ஆண்டுக்கு 33 சதவிகிதம் அதிகரித்து வந்த நிலையில், இது சுமார் 12,500 யூனிட்டுகளாக உயரும் என்று ரியல் எஸ்டேட் ஆலோசகரான நைட் ஃபிராங்க் தெரிவித்துள்ளது.
மும்பை: மும்பை மாநகராட்சி பகுதியில் சொத்துகளின் பதிவு ஆண்டுக்கு 33 சதவிகிதம் அதிகரித்து வருவதாக ரியல் எஸ்டேட் ஆலோசகரான நைட் ஃபிராங்க் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மும்பை நகரில் 9,367 சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரியல் எஸ்டேட் ஆலோசகரான நைட் ஃபிராங்க் மகாராஷ்டிர அரசின் பதிவுகள் மற்றும் முத்திரைத் துறையிலிருந்து சமீபத்திய தரவுகளைத் தொகுத்து வெளியிட்டது:
தரவுகளின்படி, டிசம்பர் மாதத்தின் இதுவரை 12,134 யூனிட்டுகள் பதிவாகிய நிலையில், இது 12,500 யூனிட்டுகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
பதிவு செய்யப்பட்ட மொத்த சொத்துக்களில், குடியிருப்பு வீடுகள் 80 சதவிகிதம் உள்ள நிலையில், பத்திரபதிவு வழியாக ரூ.10,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட வழிவகுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.