இந்தியா

அமைதிக்கான நாளை...: கேரள முதல்வர் புத்தாண்டு வாழ்த்து!

DIN

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

கேரள மாநிலம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கேரள மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஆளுநர்.

ஆளுநர், “2024-ம் ஆண்டு நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு மகிழ்வையும் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் கருத்தியல் பார்வையிலும் செயல் வழியிலும் உறுதி செய்து மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்துக்கு வழிகோலும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்,  “உலகமே புத்தாண்டை வரவேற்கும் இந்த வேளையில் நாம் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சமத்துவம் நிறைந்த நல்லதொரு நாளைத் தொடங்கும் நம்பிக்கையைப் பகிர்ந்துக் கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களைப் பிரிவினைவாத அரசியல் மூலமாக விரோத சக்திகள் பிரிக்க நினைக்கும் முயற்சிகளிலிருந்து காக்கவும் அதனை மனிதநேயத்தின் அடிப்படையில் தோற்கடிக்கவும் வேண்டும், வெறுப்பு பிரசாரத்தை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார், கேரள முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

SCROLL FOR NEXT