கோப்புப் படம் 
இந்தியா

ராஜஸ்தானில் அடுத்த 3 முதல் 4 நாள்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும்!

ராஜஸ்தானில் தற்போது நிலவி வரும் அடர்த்தியான மூடுபனி அடுத்த மூன்று முதல் நான்கு நாள்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தற்போது நிலவி வரும் அடர்த்தியான மூடுபனி அடுத்த மூன்று முதல் நான்கு நாள்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் மாநிலத்தின் சில பகுதியில் அடர்த்தியான மூடுபனி பதிவாகக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

அடர்த்தியான மூடுபனியின் தாக்கம் காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 3-6 டிகிரி செல்சியஸாக குறைவாக பதிவாக வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு பகுதிகளில் சில இடங்களில் கடும் குளிர் பதிவாக வாய்ப்புள்ளது என்று ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ராதேஷ்யாம் சர்மா தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், அடுத்த 5 முதல் 6 நாள்களுக்கு மாநிலத்தில் வானிலை பெரும்பாலும் வறண்டதாக இருக்க வாய்ப்பு உள்ள நிலையில் ஸ்ரீகங்காநகரில் குறைந்தபட்ச வெப்பநிலையான 11.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மாநிலத்தின் பிற முக்கிய நகரங்களில் இன்று 14 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT